கோயம்புத்தூரில் இருந்து ஆனைக்கட்டிக்கு கருங்கல் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி சென்றது. மாங்கரை அடுத்த மலைப்பாதையில் சென்ற போது, எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் லாரியை ஓரம் கட்டினார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாங்கரை அருகே கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து - டிப்பர் லாரி விபத்து
கோயம்புத்தூர்: மாங்கரை அடுத்த மலைப்பாதையில் கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து
அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், லாரி பள்ளத்தில் சிக்கியது. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், கொக்லின் இயந்திரத்தின் உதவியுடன் லாரியை மீட்டனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மலைப்பாதையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு முழுமையாக இல்லாததால், அவற்றை மாங்கரையில் இருந்து ஆனைக்கட்டி வரை அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.