மதுரை:மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (எ) சுப்புலட்சுமி, 'ரவுடி பேபி' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதேபோல, மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் ஷா, என்பவரும் வீடியோ பதிவிட்டு வந்தார்.
இவர்கள் ஆபாசமாக, வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்கள் மீது கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்ததைத் தொடர்ந்து, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர், இணையதளங்களில் ஆபாசமாக பேசியதாகக் கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.