கோவை:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள "ரஃபேல் வாட்ச் விலை குறித்தான விவகாரம்" தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பு என அனைத்திலும் இது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு எதிரான கட்சிகள் பல ரஃபேல் வாட்ச் விவகாரம் குறித்து அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கான ரசீது கேட்டு பல்வேறு அரசியல்வாதிகளும் சமூக வலைதளவாசிகளும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.