கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்கச்சென்ற 10 கல்லூரி மாணவர்களில், கணிஷ்க் (24), ராஜதுரை (24), சுரேந்திரன் ஆகிய 3 பேர் நேற்று (அக்டோபர் 31) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் டேங்க் அருகே ராஜதுரை உடலையும், வெள்ளிப்பாளையம் இரண்டாம் பவானி துணை மின் நிலையம் அருகே கணிஷ்க் ஆகியோரது உடலும் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் சுரேந்திரன் என்ற மாணவனின் சடலமும் குத்தாரிபாளையம் அருகே மீட்கப்பட்டது.