பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பொள்ளாச்சி லாரி பேட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் கோட்டாச்சியர் தலைமையில் ஒரு குழு சோதனை நடத்தியது.
மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல்! - three shops seal in pollachi
பொள்ளாச்சியில் கள்ளச்சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,600 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து, அதனை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
three-shops-seal-who-kept-the-kerosene-to-sell-black-market
அப்போது, ராஜாமுகமது, சண்முகம், சக்காரியா ஆகியோரது கடைகளில் சுமார் 1,600 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மண்ணெண்ணெய் மற்றும் கேன்களை பறிமுதல் செய்த அவர், மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்த மூவரது கடைகளுக்கும் சீல் வைத்தார்.
மேலும், அவர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அந்த மூவரிடமும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.