தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு... மூன்று இளைஞர்கள் அதிரடி கைது! - ஐஎஸ் ஐஎஸ்

கோவை: ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட ஆறு இளைஞர்களில் மூன்று பேருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களை மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்ட இளைஞர்களில் மூன்று பேர் கைது

By

Published : Jun 14, 2019, 4:36 PM IST

Updated : Jun 14, 2019, 5:46 PM IST

இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா, கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, புதன்கிழமை காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் ஆறு இளைஞர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருக்கிறதா என விசாரணை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், கோவையில் சம்பந்தப்பட்ட நபர்களின் அலுவலகங்கள், வீடுகளில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் , ஆறு மாத காலமாக நடைபெற்ற நிகழ்வுகளின் ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல் துறை சோதனை

இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்தனர். இந்நிலையில், அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடை ஹபிபுல்லா, வின்சென்ட் ரோடு முகமது உசேன், ஆகியோரது வீடுகளில் நேற்று சோதனை நடத்தியதில் பல்வேறு பொருட்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் முன்று பேருக்கும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கோவை மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Jun 14, 2019, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details