தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேஸ்புக் நட்பு...பள்ளி தோழனை மிரட்டி பணம் பறித்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது - பணம் பறித்த இளம்பெண்

பேஸ்புக்கில் பழகி, பள்ளி தோழனிடமே பணம் பறித்த இளம்பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

cheating friend thru facebook
பள்ளி தோழனிடம் பணம் பறித்த இளம்பெண்

By

Published : Jul 8, 2021, 6:38 AM IST

கோயம்புத்தூர்:தடாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரே பள்ளியில் பயின்றபோது, நண்பர்களான ஆணும், பெணும், மீண்டும் பேஸ்புக்கில் பழகியுள்ளனர். அந்த இளைஞர் திருமணமானவர். அவரிடம் இளம்பெண் 23 ஆயிரம் ரூபாயை செலவுக்காக பெற்றுள்ளார்.

இதனிடையே, இளம்பெண்ணை சந்திக்க ஆனைக்கட்டியில் உள்ள ஒரு ரிசாட்டுக்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். அங்கு, இளம்பெண்ணின் ஆண் நண்பர்களான அப்துல்கலாம் (25), ஆபீப் அலி (23) ஆகியோர் அந்த இளைஞரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

கூடா நட்பு கேடாய் முடியும்

உயிர் தப்ப அந்த இளைஞரும் தன்னிடம் அப்போது இருந்த பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனாலும் திருப்தி அடையாத மூவரும் மேலும் பணம் கேட்கவே, மீதி தொகையை இரண்டு நாள் கழித்து கொடுப்பதாக கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து அந்த இளைஞர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் பறித்த அந்தப் பெண்ணையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளையடிக்க கற்றுத் தந்தது யார்? - காவல் துறையினர் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details