கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி, விக்டோரியா ஹாலில் மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு தீர்மானம் போடப்பட்டது.
மேலும், சுமார் 47 ஏக்கரில், அமைய உள்ள செம்மொழி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு ரூ.99.44 கோடியும், கோவை மாநகராட்சி உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செம்மொழி பூங்காவிற்கு குழாய் அமைக்க ரூ.7.83 கோடியும், செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுவதற்கு ரூ.25.56 கோடியும், மற்றும் கலையரங்கம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டுவதற்கு ரூ.6.38 கோடியும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வ.உ.சி பூங்கா வேண்டுமென வலியுறுத்தி, விக்டோரியா ஹால் முன்பு முழக்கங்களையும், "திமுக மேயரே கோவையின் அடையாளமான வ.உ.சி உயிரியல் பூங்கா வேண்டும்" என பதாகைகளை ஏந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், “செம்மொழி பூங்காவிற்கு ரூ.200 கோடி அறிவித்த நிலையில், தற்போது பூங்கா அமைக்க அவசரக்கதியில் தீர்மானத்தைக் கொண்டு வந்து அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.