தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு - vanathi Srinivasan

கோவை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை ஒப்புவித்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

thirukkural
thirukkural

By

Published : Jan 16, 2020, 3:56 PM IST

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ரோட்டரி கிளப் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ’திருக்குறள் சேமிப்போம்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த திருக்குறளை கூறி வானதி சீனிவாசனிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர். இதில் வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர்.

குழந்தைகள் திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு

நிகழ்ச்சியின்போது பேசிய வானதி சீனிவாசன், ”திருவள்ளுவர் என்பவர் வாழ்க்கையின் அனைத்து விதிகளையும் இரண்டே வரிகளில் கூறியவர். அவரின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒரு திருக்குறளை கற்றுத்தந்து தமிழை வளர்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு!

ABOUT THE AUTHOR

...view details