கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் மாட்டுச்சந்தை வாரம் இருமுறை நடைபெற்றுவருகிறது. இங்கு ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் வாங்க வியாபாரிகள் வருவது வாடிக்கை.
கடந்த ஆறு மாதங்களாக கரோனா பரவி வருவதால் மாட்டுச் சந்தை மூடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்ததையொட்டி, தொப்பம்பட்டி தனியார் தோட்டத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் மாட்டுச் சந்தை கூடியதால் ஊர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு திப்பம்பட்டியில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூவருக்கு கரோனா உறுதியானது.