தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100-வது முறையாக சிறைக்கு சென்ற பலே திருடன் - 100 வது முறை கைது

கோயம்புத்தூர் அருகே 100-வது முறையாக பலே திருடன் சிறைக்கு சென்றார்.

100 வது முறை சிறை செல்லும் பலே திருடர்
100 வது முறை சிறை செல்லும் பலே திருடர்

By

Published : Dec 15, 2022, 2:25 PM IST

கோயம்புத்தூர்: குனியமுத்தூரை சேர்ந்த சபிர் அஹமது, நேற்று (டிச 14) பேருந்தில் பயணித்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர், சபிர் அஹமதுவின் செல்போனை திருடிவிட்டு பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றார்.

இதனை அறிந்த சபிர், தப்பிக்க முயன்ற நபரை, சக பயணிகளின் உதவியுடன் மடக்கிப் பிடித்து, கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, தப்பிக்க முயன்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், செல்போனை திருடியவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (எ) போண்டா ஆறுமுகம் (53) என்பதும், ஏற்கனவே அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போண்டா ஆறுமுகம் திருட்டு வழக்கில் 100-வது முறையாக சிறைக்கு செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கட்டட ஒப்பந்ததாரர் வேடத்தில் கில்லாடி திருடன்: 6 மாதங்களாக சிக்காதது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details