தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணையாக இருப்போம்.. இணை அரசாங்கம் செய்ய மாட்டோம் - ஆளுநர் தமிழிசை பேச்சு

ஆளுநரின் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர் - தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநரின் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர் - தமிழிசை செளந்தரராஜன்

By

Published : Nov 28, 2022, 5:14 PM IST

கோயம்புத்தூர்: காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ஜி-20க்கு தலைமை தாங்க போகிறோம். உலகத்திற்கே குருவாக பாரதம் இருக்க வேண்டுமென்ற கனவு நிறைவேறி வருகிறது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்பதை, இங்குள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் கேட்டால் தெரியும். எந்த விதத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட கூடாது என்பதுதான் அனைவரது நிலைப்பாடுமே.

தெலங்கானாவில் அரசாங்கம் முரண்பாடாக இருக்கிறது. கவர்னர் முரண்பாடு இல்லை. என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது. அவற்றை தாமதப்படுத்த வேண்டும் என்று இல்லை. சில விவரங்களை கேட்டிருக்கிறோம். தெலங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் விவரங்களுக்காக நிறுத்தி வைத்திருக்கிறோம்.

அதில் சில மாற்றங்களுடன் கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கிறதா என்பதை பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும். இவற்றை தாமதம் என்று எடுத்துகொள்வதை விட, கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும். அரசியல் காரணத்திற்காக தெலங்கானாவில் எனக்கு கவர்னர் உரை மறுக்கப்பட்டபோதும், பட்ஜெட் தாக்கலுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை.

மக்கள் நலனை அடிப்படையாக வைத்து நான் இயங்கி வருகிறேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளாமல் சிலர் இங்கே விமர்சிக்கின்றனர். மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். ஆளுநர்களை சந்திப்பதால் பல பிரச்னைகள் தீர்ந்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஒரு மதத்தை சார்ந்து பேசுகின்றாரா என தெரியவில்லை.

மதச்சார்பற்ற தன்மையை தமிழ்நாடு முதலமைச்சர் கடைபிடிக்க வேண்டும். முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில் பாரபட்சம் காட்டக் கூடாது. இதற்கு பதில் கிடைப்பதே இல்லை. பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் துணை அரசாங்கம் நடத்ததான் நினைக்கிறோம். இணை அரசாங்கம் நடத்த நினைக்கவில்லை. ஆளுநர் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர்” என தெரிவித்தார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி; விளைவுகள் ஆளுநருக்கு நன்றாக தெரியும் - அமைச்சர் ரகுபதி!

ABOUT THE AUTHOR

...view details