கோயம்புத்தூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கோவை வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவிநாசி சாலையில் உள்ள ரெசிடண்சி ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோயிலை நம்பி வாக்குகளைப் பெறத் தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டு இருக்கிறார்.
அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட்டணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. நாடாளுமன்ற பிரச்சனையில் பிரதமர் வாய் திறக்கவில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் நடந்த பேரிடரைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், குஜராத் போன்ற மாநிலங்களுக்குச் சிறிய பிரச்சனை என்றாலும் கூட ஆயிரம் கோடியை வழங்குகிறார்.
ஆகவே, எந்த வகையிலும் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால், பக்தி யாத்திரையின் மூலமாகத் தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து மீண்டும் வெற்றி பெறலாம் என இறுதியாக ராமரை நம்பி இருக்கிறார். அதனால் தான், அவசர கதியில் ராமன் கோயிலைக் கட்டி திறக்க இருக்கிறார். இதுவரை இந்தியா மட்டுமல்ல, எந்த நாட்டிலும் கோயிலுக்காகப் பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனைத் திறந்து வைத்து யாரும் பார்த்தது இல்லை.
இந்திய அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு இல்லை. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தான் உண்மையான ஜனநாயகம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை குறித்துப் பேசிய அவர், "ஆளுநர் எப்படி நடந்துகொள்கிறார் என மக்கள் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு.