தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கட்டாய ஊரடங்கு இல்லை - ஆட்சியர்

கோவை: மாவட்டத்தில் கட்டாய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று ஆட்சியர் ராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

There is no mandatory curfew in coimbatore said collector rasamani
There is no mandatory curfew in coimbatore said collector rasamani

By

Published : Mar 23, 2020, 4:54 PM IST

கோவையில் கரோனா வைரசால் மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட்டப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேசுகையில், கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளித்துவருவதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

கோவையில் கட்டாய ஊரடங்கு இல்லை

மாவட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிட்டுள்ளதாகவும் கூறிய அவர், தமிழ்நாடு - கேரள எல்லைகள் மூடப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் தற்போது கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வரவில்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்பாமல் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்பிய விழுப்புரம்

ABOUT THE AUTHOR

...view details