பாஜக சார்பில் கோவையில் நடத்தப்பட்ட வேல் ஓவிய போட்டியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாஜக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருக்கின்றது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமான ஒன்று. தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் வலுவாக இருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இப்போது வரை தொடர்கின்றது.
'முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை, ஆனால்...!' - வானதி சீனிவாசன்
கோயம்புத்தூர்: அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்பதை எங்களின் தேசிய தலைமை சொல்ல வேண்டும் என பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
புதியதாக கட்சி ஆரம்பிக்க உள்ளவர்கள், ஆரம்பித்தவர்கள் கூட்டணிக்கு வரலாம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்பதை எங்களின் தேசிய தலைமை சொல்ல வேண்டும். கூட்டணி விஷயங்கள் எல்லாம் ஜனவரி மாதத்திற்கு பின் உறுதியாகும்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:”2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன்கூட கூட்டணி அமையலாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி!