தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது! - கோவை

கோவை: புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

kovai

By

Published : Sep 10, 2019, 11:55 PM IST

மத்திய அரசின் தவறான கல்விக் கொள்கையின் அடிப்படையில் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு கேள்வித்தாளில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் குறித்து அவதூறான வகையில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதனைக்கண்டித்து அந்தப் பகுதியை நீக்கக் கோரி திமுக மாவட்ட ஆதிதிராவிட குழு அமைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திமுக ஆர்ப்பாட்டம்

இதனைத்தொடர்ந்து கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மனு அளித்தார். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் காதர்பாட்சா, ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் சீரபாளையம் செந்தில், ஞானசேகர், வக்கீல் நீத்தில்வழுதி, கருப்புசாமி, சந்தோஷ் குமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்து விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details