கோவை மாவட்டம், இடையர்பாளையம், ராகவேந்திரா ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ராஜு. கொங்கன் ரயில்வேயில் தலைமைப் பொறியாளராக இவர் பணியாற்றி வருகிறார்.
பணி மாறுதல் காரணமாக இவர் தனது குடும்பத்துடன் கடந்த மே மாதம் ஜம்மு காஷ்மீருக்குச் சென்று பணியாற்றத் தொடங்கிய நிலையில், கடந்த 8ஆம் தேதி இவரது வீட்டில் ஜன்னல்கள் திறக்கப்பட்டும், கம்பிகளால் உடைக்கப்பட்டும் இருப்பதாக இவரது அண்டை வீட்டார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து உடனடியாக 12ஆம் தேதி கிளம்பி வந்து அவர் பார்த்தபோது, வீட்டில் படுக்கை அறை உடைக்கப்பட்டு, சுமார் 20 லட்சம் மதிப்பிலான 59 பவுன் தங்க நகைகளும், 4.5 கி.கிராம் வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.