கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்த செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அப்பகுதியில் அர்ஜுனா என்ற பெயரில் பேன்சி ஸ்டோர் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர், வழக்கம்போல் நேற்று பணிகள் முடிந்தவுடன் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலையில் கடைக்கு திரும்பிய அவர் கடையின் பூட்டுகள் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு, கல்லாவிலிருந்த இருபதாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பேன்சி ஸ்டோரில் இருந்த பொருட்களும் திருடு போயிருந்தன.