தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கால்நடை மருத்துவர்கள் பணி விரைவில் நிரப்பப்படும்’ - உடுமலை ராதாகிருஷ்ணன் - minister udumalai radhakrishnan

கோயம்புத்தூர்: வனத்துறையில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவப் பணியிடங்களுக்கு மருத்துவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

minister
minister

By

Published : Aug 29, 2020, 4:03 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதி எம்ஜி நகரில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

பின்னர் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி வார்டு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழைநீர் கழிவுநீர் சீராக செல்ல பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, " கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பு முடித்து வெளியே வந்த மருத்துவர்கள் எண்ணிக்கை 360ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் கால்நடை கழிவு நிலையங்கள் இருக்கின்றன. மேலும் 200 மருத்துவர்கள் தேவை என்பதால், தமிழ்நாட்டில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனத்துறையில் காலியாக உள்ள கால்நடை மருத்துவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாணவர்களின் விடிவெள்ளியாக திகழும் முதலமைச்சர் - அமைச்சர் உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details