கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரம் பகுதியில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தான் செல்லும் இடமெல்லாம் எழுச்சியையும், மகிழ்ச்சியையும் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், எழுச்சியை காவல் துறை கொண்டு கைது நடவடிக்கையின் மூலம் அடக்கிவிட முடியாது என்று தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.
மக்களிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இடையில் குறுக்கிட்ட பெண் ஒருவர், மக்கள் கிராம சபைக் கூட்டம் என்றால் என்ன? என்று கேட்க, அதற்கு அங்கிருந்த திமுகவினர் அமருங்கள் எனச் சொல்ல அதற்கு அப்பெண், தானும் ஒரு இந்திய குடிமகள் என்றும் தனக்கும் கேள்வி கேட்க உரிமையுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து திமுகவினர் கூச்சலிடவே அப்பெண், 'என்னை மிரட்டாதீர்கள், நானும் கேள்வி கேட்பேன்' எனக் கூறினார். அதற்கு நீ எந்த ஊரு அம்மா? என ஸ்டாலின் கேட்டார்.