தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் உலா வரும் யானை கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை! - Wild elephant

கோவை: வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத்துறை காட்டு யானை எச்சரிக்கை  வால்பாறையில் உலாவரும் காட்டு யானை கூட்டங்கள்  Wild elephant herds roaming Valparai  Forest Department elephant Alert  Forestry Alert  காட்டு யானை  Wild elephant  Wild elephant Alert
Wild elephant herds roaming Valparai

By

Published : Dec 22, 2020, 7:46 PM IST

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள ஐயர் பாடி பங்களா செல்லும் வழியில் உள்ள 40 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.

யானைகள் படையெடுப்பு

வால்பாறை பகுதியில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை 500க்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் வந்து செல்வது வழக்கம். தற்போது கேரளப் பகுதிகளில் சபரிமலை சீசன் தொடங்கி விட்ட காரணத்தினால், அங்குள்ள யானைகள் அனைத்தும் வால்பாறை நோக்கி படையெடுத்து வந்து செல்வது வழக்கமாகும்.

யானைகள் முகாம்

தற்போது ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

உலா வரும் யானை கூட்டம்

வனத்துறை கண்காணிப்பு

இதனால், வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டு, ரேஷன் கடை, குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுழற்சி முறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் எஸ்டேட் தொழிலாளிகள் இரவு நேரங்களில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:யானை கூட்டத்தை சாதுர்யமாக பைக் சத்தத்தால் விரட்டிய இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details