மாவட்ட சேர்மேன், துணை சேர்மேன் பதவியேற்பு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட சேர்மேனாக வெற்றி பெற்ற சாந்திமதி, துணை சேர்மனாக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களின் முன்னிலையில் அவர்களது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு எஸ்.பி.வேலுமணி பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன் பொறுப்பேற்றுக் கொண்டனர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையும் படிங்க:பதவியேற்பு விழாவில் மரக்கன்றுகளைப் பரிசளித்த ஊராட்சித் தலைவர்!