ஆர்எஸ்எஸ் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோயம்புத்தூர் காருண்யா பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.
200-க்கும் மேற்பட்ட உள்ளூர் காவல் துறையினர், 20-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், மோகன் பகவத் தங்கும் இடத்தைப் பார்வையிட கோவை விமான நிலையத்திலிருந்து பொலிரோ வாகனத்தில் ஏழு பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் வந்தனர்.