திருப்பூர்: யூனியன் மில் சாலையில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சக்தி மல்டிபிளக்ஸ்’ திரையரங்கில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’ படத்தைக் காண 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செல்வநாயகம் என்பவர் தனது குடும்பத்துடன் சென்றார். அப்போது இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் செல்வநாயகம் தனது குடும்பத்துடன் சென்றபோது மதுபோதையில் இருந்ததாக அவர்களை படம் பார்க்க திரையரங்கு நிர்வாகம் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது.
மேலும், டிக்கெட் பணத்தையும் திருப்பி வழங்காமல், மாற்றுக் காட்சிக்கும் ஏற்பாடு செய்யாமல் திருப்பி அனுப்பியதால் செல்வநாயகம் இது குறித்து 2020ஆம் ஆண்டு திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.