கோவை:வால்பாறையில் கரடி தாக்கியதில், ஐயர்பாடியைச் சேர்ந்த வில்லோனி மோகன்ராஜ் உயிரிழந்தார். மேலும், வசந்த் பிரபாகரன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், அவர்களது இருவரது வீட்டிற்கும் சென்று வால்பாறை ஆய்வாளர் கற்பகம் ஆறுதல் கூறியதோடு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருள்களையும் வழங்கினார்.
கரடி தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறிய ஆய்வாளர் - கரடி தாக்கியவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்
வால்பாறையில் கரடி தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று வால்பாறை காவல் ஆய்வாளர் ஆறுதல் கூறியுள்ளார்.
கரடி தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறிய ஆய்வாளர்
அதனைத் தொடர்ந்து, சிறுமிகள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க, பெற்றோர்கள் தொடர்ச்சியாக குழந்தைகளைக் கண்காணிக்கவேண்டும் என்றும், பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை 118 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:குன்னூர் அருகே ஊருக்குள் பட்டப்பகலில் நடமாடும் கரடி!