கோவை: காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை, கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் பயணத்தை துவங்கினர்.
முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில், இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.