தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் அவரது மனைவியை வைத்து வாழ தகுதியில்லாதவர் - கரு.பழனியப்பன் - கோயம்புத்தூர் மாவட்ட செய்தி

கோயம்புத்தூர்: இந்த நாட்டின் பிரதமர் அவரது மனைவியை வைத்து வாழ தகுதியில்லாதவர் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியிருக்கிறார்.

director karu.palaniappan
director karu.palaniappan

By

Published : Feb 16, 2021, 5:59 AM IST

கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தின் 21ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், எம்.பி. பி.ஆர். நடராஜன், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சாதி மறுப்பு திருமணம் செய்த 20 ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தில் சாதி மறுப்பு திருமணத்தினால்தான் சாதி வெறியும் மத வெறியும் அடங்கும் என்று நீதிபதி கூறியுள்ளார். இது மிகவும் சிறப்பான ஒரு பதிவு. சாதி என்பது அரசு வழங்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்றவற்றிற்குதானே தவிற திருமணங்களுக்கு இல்லை" என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எம்.பி. பி.ஆர்.நடராஜன், "திரைத்துறையில் இருக்கும் நடிகை ஒருவர் 'Go back modi' என்று கூறியதற்கு டிஜிபியிடம் புகார் அளித்து அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்" என்று விமர்சித்தார்.

நிகழ்ச்சியில் கடைசியாக பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், "காதலை எதிர்ப்பவர்களுக்கு மட்டும்தான் ஒரு நாள் காதலர் தினம். காதலிப்பவர்களுக்கு அனைத்து நாளுமே காதலர் தினம். சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை முழுமையாகக்கூட பார்க்காமல் தலைப்பினை பார்த்து கமேண்ட்செய்பவர்கள் பாஜகவினர்.

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிகள்

இந்த நாட்டின் பிரதமர் அவரது மனைவியை வைத்து வாழ தகுதியில்லாதவர். வருடத்திற்கு ஒரு முறை பிரதமர் அவரது தாயாருடன் புகைப்படம் எடுத்து பதிவிடுகிறார். ஏன் மனைவிடம் புகைப்படங்கள் எடுப்பதில்லை. பெண்கள் சிந்திக்கிறார்கள் என்பதுதான் இவர்களது பிரச்னை. ஓவியாவை ரஜினி என்று இவர்கள் எண்ணி கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓவியாவிற்கு ஒரு ஆர்மி உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:பிப்.17 முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் - திமுக அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details