கோவை: நேற்று வியாழக்கிழமை இரவு 11.15 மணிக்கு ரயில் நிலைய நடை மேடை எண் 3இல் வண்டி எண் 16528 கண்ணூரில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வண்டியில் சேலத்தைச்சேர்ந்த சிவகுமார், இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதாக நினைத்து ஓடும் இரயிலில் இருந்து இறங்க முயற்சிக்கையில், தண்டவாளத்தில் சிக்கப் பார்த்தார்.
இதனையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அசம்பாவிதத்தில் இருந்து ரயில்வே போலீசாரால் காப்பாற்றப்பட்டார். இதனால் சிவகுமார் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.