கோவை:வடவள்ளி பகுதியைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணன். இவரது தனியார் பேங்க் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.2,500 பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராமல் இவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்துவிட்டது. இதனையடுத்து வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சென்று மேலாளரிடம் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
பல முறை கேட்டும் எவ்வித விளக்கம் அளிக்கப்படாமல் வங்கி கணக்கிற்குப் பணம் மீண்டும் வராமல் இருந்ததால், மன உளைச்சலான இவர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இதுகுறித்து மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயினை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.