திருப்பூர்: முருகம்பாளையம், பாறைக்காட்டைச் சேர்ந்தவர் கார்த்திக். தாராபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவட் வீட்டுக்கு அருகே துவைக்கும் கல்லில் அமர்ந்து அடிக்கடி ‘பப்ஜி’ விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நேற்று (ஜனவரி 31) இரவு வழக்கம்போல் நண்பர்களுடன் கார்த்திக் ‘பப்ஜி’ விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தூங்குவதற்கு இடையூறாக இருப்பதாக வந்து எச்சரித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.