தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்புத்தூரில் போல்டை விழுங்கிய முதியவர்

கோயம்புத்தூரில் பணியின் போது எதிர்பாரத விதமாக போல்டை விழுங்கிய முதியவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

போல்டு நட்டை விழுங்கிய முதியவர்:சிறப்பாக செயல்பட்டு அகற்றிய மருத்துவர்கள்
போல்டு நட்டை விழுங்கிய முதியவர்:சிறப்பாக செயல்பட்டு அகற்றிய மருத்துவர்கள்

By

Published : Oct 21, 2022, 11:46 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்சுதீன்(55). இவர் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி வாயில் போல்டை வைத்த படி வேலை செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த போல்டை விழுங்கியுள்ளார்.

இதனால், அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை சக தொழிலாளர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து மார்பில் எக்ஸ்ரே எடுத்தனர். அவர் விழுங்கிய போல்டு இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில், மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் மருத்துவர் அலிசுல்தான் தலைமையில் மருத்துவர்கள் சரவணன், மயக்கவியல் துறை மணிமொழி, செல்வன், மதனகோபாலன் ஆகியோர் இணைந்து சாம்சுதினுக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து போல்டை வெற்றிகரமாக அகற்றினர். அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

இதையும் படிங்க:தாம்பரம் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.70,840 பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details