கோயம்புத்தூர் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்-சுமித்ரா ஆகியோருக்கு இன்று (நவ. 28) திருமணம் நடந்தது. மணமக்களின் பெற்றோர் வேளாண் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது பாரம்பரியத்தைக் காக்க மறு வீட்டிற்கு மாட்டுவண்டியில் சென்றனர்.
மாட்டு வண்டியில் மறு வீடு சென்ற புதுமண தம்பதி!
கோயம்புத்தூர்: அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் மாட்டுவண்டியில் பயணம் செய்தனர்.
புதுமண தம்பதி மதுக்கரையில் உள்ள திருமண மண்டபத்திலிருந்து அரிசிப்பாளையத்தில் உள்ள வீடு வரை மாட்டு வண்டியில் சென்றது காண்போரை வியக்கவைத்தது. கரோனா காலத்தில் சொந்தங்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் பங்கு கொள்கின்றனர். மேலும், கோயம்புத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் குடும்ப வழக்கப்படி திருமணம் முடிந்ததும் மாட்டு வண்டியில் பயணிப்பது இன்றுவரை கடைப்பிடித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி!