கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலர்கள் விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என 'சிட்டிசன் போரம்' அமைப்பினர் தெரிவித்தனர்.
விடுபட்ட வாக்காளர் பட்டியலை சரிசெய்ய கோரிக்கை - சிட்டிசன் போரம் அமைப்பு - சிட்டிசன் போரம் அமைப்பினர் பேட்டி
கோவை: மாநகராட்சி அலுவலர்கள் விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என சிட்டிசன் போரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிட்டிசன் போரம் அமைப்பினர், 'கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வார்டு எண் 23ஆவது, 24ஆவது ஆகிய வார்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 71ஆவது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் 11,701ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது ஒன்பதாயிரத்து 159 வாக்காளர்களாக குறைந்துள்ளது.
ஆகையால் மாநகராட்சி அலுவலர்கள் விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்' என அவர்கள் உறுதிப்படத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிழைக்கவே வழியில்லை: ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை எதற்கு?