தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கிழித்த கணவன்.. கோவை பகீர் சம்பவம்!! - pollachi

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கொண்டு கிழித்து விட்டு தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கிழித்த கணவன்.. கோவை பகீர் சம்பவம்!!
காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கிழித்த கணவன்.. கோவை பகீர் சம்பவம்!!

By

Published : Nov 5, 2022, 4:06 PM IST

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் தனது பெற்றோருடன் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்த போது உடுமலை காந்தி சதுக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 27). என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததாக தெரிகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், மணிகண்டன் வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த மாதம் மதுபோதையில் மணிகண்டன் சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமி(மனைவி) பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று உடுமலையில் இருந்து பெள்ளாச்சி சென்ற மணிகண்டன் சிறுமியை குடும்ப நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு - முபீன் குறித்து பரபரப்பு தகவல் அளித்த மாமியார்

ABOUT THE AUTHOR

...view details