கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலையத்தில் சர்க்கிள் ரைட்டராக இருப்பவர் மாதப்பன். இவர் நேற்று மாலை சூலூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். பெட்ரோல் நிலையத்தில் இருந்த பம்பாய் அசோக்ராஜா(26) ஊரடங்கு உத்தரவு காரணமாக பெட்ரோல் விற்பனை 2 மணியுடன் முடிந்துவிட்டது.
எனவே பெட்ரோல் நிரப்ப முடியாது எனக் கூறியுள்ளார். இதற்கு,"நான் போலீஸ் எனக்கே பெட்ரோல் நிரப்ப மாட்டாயா" எனக் கேட்ட சர்க்கிள் ரைட்டர் மாதப்பன், அசோக் ராஜாவைத் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துவந்துள்ளார். அங்கு அசோக் ராஜாவை மாதப்பன் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அசோக்ராஜாவை காவலர் அழைத்துச் சென்ற விவரம் அறிந்த பங்க் உரிமையாளர் காவல் நிலையம் வந்துள்ளார்.