தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டைக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும்' - சேவல் வளர்ப்போர் சங்கம்

கோவை: ஜல்லிக்கட்டுப் போல பாரம்பரியமிக்க சேவல் சண்டைக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பொள்ளாச்சி சேவல் வளர்ப்போர் சங்கத்தினர் கோரிக்கைவைத்துள்ளனர்.

By

Published : Jan 20, 2020, 5:11 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பாரமடையூரில் சேவல் கண்காட்சி நடைபெற்றது. கிளிமூக்கு, விசிறிவால் ரக சேவல் வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டன.

சேவல் கண்காட்சி

சேவல்களின் மூக்கு, கண், காது, கழுத்து, நீளம், உயரம், தோகை உள்ளிட்ட தனி அம்சங்களின் அடிப்படையில் அதன் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், பட்டுப்புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சேவல் வளர்ப்போர் சங்கத்தினர், ஜல்லிக்கட்டு போலவே பாரம்பரியமிக்க சேவல் சண்டைக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

பொள்ளாச்சி சேவல் வளர்ப்போர் சங்கத்தினர்

இதையும் படிங்க:வீரர்களை அலறவிட்ட குலமங்கலம் காளை: காரை பரிசாக வழங்கிய ஓபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details