கோயம்புத்தூர்:இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா என்ற வினோதினியை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று (மார்ச். 15) சங்ககிரியில் பிடித்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர் மீது ஏற்கனவே 2021 ஆம் கஞ்சா வழக்கு இருந்து வந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை கோவை இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தமன்னா என்ற வினோதினியை நீதிமன்றத்தில் வாய்தாவிற்குத் தொடர்ந்து ஆஜராகாகதால் நீதிபதி தமன்னாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.