கோயம்புத்தூர்:சூலூர் அருகே பள்ளபாளையம் காந்திநகரில் மளிகை கடை வைத்திருப்பவர் செல்வி. இவரது கடையின் அருகே சரோஜினி (82) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று (ஆக. 05) மதியம் 12 மணி ஆகியும் மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வராததால் செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது மூதாட்டி கை, கால் டேப் மூலம் ஒட்டப்பட்ட நிலையில் கட்டில் அருகே கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வி உடனடியாக கூச்சலிட்டவாறு வெளியே வந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.