தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரையில் சிதரிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்: காவல் துறையினரிடம் ஒப்படைத்த வன காவலர்! - சாலையில் கிடந்த 17 ஆயிரம் ரூபாய்

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அருகே சாலையில் சிதரிக்கிடந்த 17ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வன காவலர் ஒருவர், காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

The forest guard handed over Rs. 17,500 lying on the road to the police
சாலையில் கிடந்த 17 ஆயிரம் ரூபாய்

By

Published : Jul 24, 2020, 10:40 AM IST

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதி தாளியூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளி அருகில் 500 ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளன. அதைப் பார்த்த கெம்பனூர் வன காவலர் செல்வராஜன், 35 நோட்டுகள் என மொத்தம் 17 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்துச் சென்று தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கீழே கிடந்த அனைத்து பணத்தையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்த வன காவலருக்கு, தொண்டாமுத்தூர் காவல் துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அந்த பணம் யாருடையது என்றும் பணத்தில் அச்சிடப்பட்டுள்ள எண்களை கொண்டும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details