கோவை: தொப்பம்பட்டி பூங்கா நகர் பகுதியில் வசிப்பவர் முகமது ரபிக்(50). இவரது மனைவி உமேரா. இவர்களது மகன் ஷாஜகான்(22), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஷாஜகானுக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (மார்ச் 14) நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது தூங்கிகொண்டிருந்த முகமது ரபிக் தனது மகன் ஷாஜகானிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமது ரபிக், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஷாஜகானை தாக்கினார்.