தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல்: ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்-மருத்துவமனையின் நடவடிக்கைள் என்ன? - ஈஎஸ்ஐ மருத்துவமனை

கோயம்புத்தூர்: கரோனா பரவல் காரணமாக இன்று ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியதால் நோயாளிகளுக்காக அங்கு தற்காலிகமாக இடவசதிகள் செய்து தரப்பட்டது.

ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அலைமோதிய நோயாளிகள்
ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அலைமோதிய நோயாளிகள்

By

Published : May 4, 2021, 8:02 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கோவையில் அதிக பேர் சிகிச்சைக்காக ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் அங்கு இன்று (மே 4) அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதனால், அங்கு படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனால், அங்கு சிகிச்சைப் பெறுவதற்காக வந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. வயதானோர் பலரும் வளாகத்தில் பாதையோரம் படுத்து உறங்கினர்.

இதனைக் கண்ட மருத்துவ நிர்வாகம் உடனடியாக அவர்களுக்காக அவ்வளாகத்தில் பார்வையாளர்கள் அமரும், காத்திருப்பு அறை இருக்கும் இடங்களில் தற்காலிக இடவசதிகளை செய்து கொடுத்தனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறும் வகையில் மருத்துவமனையில் இட வசதிகள் செய்து தரும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பொதுமக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மருத்துவமனை தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details