தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் - தட்டிக் கேட்ட பயணிக்கு அடி - kovai latest news

கோவை: தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது.

kovai
kovai

By

Published : Feb 16, 2020, 11:51 PM IST

கோவை ரயில் நிலையம் அருகில் இன்று ஒண்டிப்புதூரிலிருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியுள்ளார். அதனால் பயந்த பயணி ஒருவர் மெதுவாக ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதை, சிறிதும் பொருட்படுத்தாத ஓட்டுநர் தொடர்ந்து வேகமாகவே ஓட்டியுள்ளார்.

அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை அடித்து பேருந்திலிருந்து கீழே இறக்கியுள்ளார். அதைக்கண்டு கோபமடைந்த சகப் பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கண்டித்துள்ளனர்.

உக்கடம் சாலை
அதன்பின் இதுகுறித்து கோவை பந்தயசாலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி - சாலையில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள்

ABOUT THE AUTHOR

...view details