கோவை தொண்டாமுத்தூர் தினம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், நேற்று (பிப்.17) வீட்டில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் வீட்டில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது.
அதில் ஆனந்தன், தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மரண வாக்குமூலம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த வாக்குமூல கடிதத்தில், “வீடு கட்ட தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்றதாகவும், கரோனா காலம் என்பதால் கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இந்நிலையில், அந்நிதி நிறுவனத்தினால் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தனது இறப்பிற்கு முழு காரணம் தனியார் நிதி நிறுவனம் மட்டுமே” என்று எழுதப்பட்டிருந்தது.