கோயம்புத்தூர்: கோவை விழாவின் ஒரு பகுதியாக இன்று மற்றும் நாளை கொடிசியா வளாகத்தில் செட்டிநாடு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை செட்டிநாடு குழும தலைவர் முத்தையா துவக்கி வைத்தார். இதில் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த பல பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Coimbatore Vizha 2023: கோவையில் செட்டிநாடு பாரம்பரிய திருவிழா! - Coimbatore
கோவை விழாவின் ஒரு பகுதியாக செட்டிநாடு திருவிழா மக்களிடையே அமோகமாக வரவேற்பை பெற்றது.
இங்கு செட்டிநாடு நகர கோயில்கள், கடைவீதி பொருட்கள், சுவர்களில் ஸ்டென்சில் ஆர்ட், செட்டிநாடு உணவு வகைகள், சிறுவயதில் விளையாடி மறந்து போன பல பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிட்டவை 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதனை மக்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மனதிற்கு பிடித்ததை வாங்கி செல்லவும், உணவு வகைகள் சமைத்து கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய ஐடி அதிகாரிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிஐ!