தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 21, 2019, 6:21 PM IST

ETV Bharat / state

'மத்திய பாஜக அரசு மக்களின் பிரச்னைகளை கேட்கும் அரசு' - விட்டுக்கொடுக்காத வானதி சீனிவாசன்!

கோவை: தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாகவும் உள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து வானதி சீனிவாசன் கூறியதாவது, கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜாப் ஆர்டர் ஜிஎஸ்டி 12% குறைந்துள்ளது. இதன்மூலம் மேற்கு தமிழகத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்று அதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்

மேலும் தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்னை குறித்து கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாகவும் அமைந்துள்ளது. மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், ரயில்வே பணிகளில் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் குறித்து முழு விவரம் வெளிவந்தவுடன் அது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details