கோவையில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'வணிகத்துறை தீபாவளிக்கு பின் நஷ்டங்களில் இயங்கி கொண்டிருக்கிறது என்றும், அமேஜான், பிளிக்கார்ட் போன்ற நிறுவனங்கள் சலுகைகள் அளித்து மோசடி செய்கின்றனர் எனவும் கூறினார்.
தொடர்ந்து, 'இதனை பிரதமர் நரேந்திர மோடியும், நிர்மலா சீத்தாராமனும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நடிகர் விஜய் சேதுபதி நடித்த மண்டி விளம்பரம் எங்கள் போன்ற வியாபாரிகளுக்கு வருத்தம் அளிக்கிறது' என்றார்.