கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த மின்ஹாஜுதீன் (30) என்பவர், திருப்பூர் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளர்.
இந்த நிலையில் இவருக்கு கரோன தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து நேற்று (ஆக.18) மின்ஹாஜுதீன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.
கரோனாவால் உயிரிழந்த காவலரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இன்று அவரது உடல் பூமார்க்கெட் பகுதியில் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!