ஓடும் லாரியில் ஜவுளித் துணிகள் கொள்ளை! - ஓடும் லாரியில் கொள்ளை
கோயம்புத்தூர்: ஓடும் லாரியின் தார்ப்பாயை கிழித்து சினிமா பாணியில் ஜவுளித் துணிகள் கொள்ளையடிக்கப்பட்டது.
ஈரோடு பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஜவுளிகள் ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரவிக்குமார் லாரியை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடிக்கு வந்த பொழுது ரவிக்குமார் இறங்கி தார்ப்பாய் கட்டியது சரியாக உள்ளதா என சோதனை செய்து பார்த்துள்ளார்.
அப்பொழுது லாரியில் உள்ள தார்பாய் கிழிக்கப்பட்டு உள்ளிருந்த ஜவுளி பண்டல்களை பிரித்து எடுத்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கணியூர் டோல் கேட்டில் இருந்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
ரவிக்குமாரின் புகாரின் பேரில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடியை கடந்து வந்த நிலையில் எந்த பகுதியில் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.