கோவை மாவட்டம் பொன்னே கவுண்டன் புதூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. டெம்போ ஓட்டுநரான இவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவந்தார். மதுவுக்கு அடிமையான பழனிச்சாமி தனது தந்தை வேலுச்சாமியிடம், சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதித் தருமாறு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (11.08.20) பழனிச்சாமி குடித்துவிட்டு தனது தந்தையுன் சண்டையிட்டுள்ளார். பின் பழனிச்சாமி உறங்கச் சென்றுள்ள நிலையில், இன்று (12.08.20) அதிகாலை 3 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் பழனிச்சாமியை மரம் வெட்டும் கோடாரியால் வேலுச்சாமி வெட்டிக் கொன்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்தோர் சத்தம் போட்டதை கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்துள்ளனர், பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.