கோவை:பொள்ளாச்சி அருகே கிழவன் புதூரில் நேற்று (அக்.30) தனியார் தோட்டத்தில் பத்தடி நீள மலைப்பாம்பு புதரில் பதுங்கி இருப்பதாக WHCT தன்னார்வலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற அவர்கள், புதரில் பதுங்கி இருந்த பத்தடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அந்த பாம்பு ஆழியாரில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. பொள்ளாச்சிமற்றும் சுற்றுவட்டார பகுதியில் மலைப்பாம்பு நாகப் பாம்பு, மண்ணுளி, கட்டுவிரியன் உள்ளிட்ட அனைத்து வகை பாம்புகளை பிடிப்பதற்காக வனத்துறை மூலம் பாம்பு பிடிப்பதில் நன்கு பயிற்சி பெற்ற WHCT தன்னார்வலர் அமைப்பு மூலம் பாம்புகளை பிடிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.